1555 june 9:

பனிமய அன்னையின் அழகிய அற்புத சுரூபம் “சந்திலேனா” கப்பல் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்தது.

1582 ஆகஸ்ட் 5

”இரக்கத்தின் மாதாவின் ஆலயம்” கொச்சி ஆயர் மேதகு தவோரா ஆண்டகை அவர்களால் கிரகோப் தெருவில் திறந்து வைக்கப்பட்ட்து.இதுவே “செயின்ட் பவுல் ஆலயம்” என்றும் பின்னர் பனிமய மாத ஆலயம் என்றும் அழைக்கப்பட்ட்து.

1601 முதல்:

கொச்சி மறைமாவட்டத்தைச் சார்ந்த ஒரு குருவும் குருவும் பனிமய மாதா ஆலயத்தின் பங்குப பொறுப்பு ஏற்றனர் .

1712 ஏப்ரல் 4

தற்போதுள்ள பெரிய கோவிலுக்கு அருட்தந்தை.விஜிலியுஸ் மான்சி சே.சா.அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

1713-ஆகஸ்ட் 5

பனிமய அன்னையின் புதிய ஆலயம் திறக்கப்பட்டது.

1806 -பிப்ரவரி 2

முதல் தேரோட்டம் நடைபெற்றது.

1934

ஆண்டு மறைத்திரு. சூசாய்நாதர் அடிகள் முயற்சியால் நாட்டிலிருந்து வருவிக்கப்பட்ட வெண்சலவைக் கல்பீடம் பனிமய அன்னை ஆலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டது.

5.8.1960

மேதகு தாமஸ் பர்னாந்து ஆயரின் முயற்சியால் பனிமய மாதா ஆலயம் ரூமைநகர் “மேரி மேஜர்” பேராலயத்துடன் இணைக்கப்பட்டு அதிகார பத்திரம் வழங்கப்பட்டது.

5.8.1980

தூய பனிமய அன்னை ஆலயம் தூத்துக்குடி மறைமாவட்டத்துடன் இணைந்து 5௦- ஆம் ஆண்டு "பொன்விழா" வெகு சிறப்புடன் நடத்தப்பட்டது

1982-ஜூலை 30

பனிமய அன்னையின் ஆலயம் 'பேராலயம்'(Basilica) என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டது.

2007ஆகஸ்ட் 5

பசிலிக்காகவாக உயர்த்தப்பபட்ட வெள்ளிவிழா. பேராலயத்தில் 425 ஆண்டு நிறைவு

2015 ஜனவரி 13

பேராலயத்தில் 2 ஆவது பங்குத்தந்தையான அருள்தந்தை அந்தோனி சூசைநாதர்(1932-1938) இறையடியாராக உயர்த்தப்பட்டார் .

2015 டிசம்பர் 2

பேராலயத்தில் துணைக்கோவிலான புனித சவேரியார் சிற்றாலயம் புதுப்பிக்கப்பட்டது.

2017 ஜூலை 15

பேராலயப் பங்குத்தந்தையரின் இல்லம் பேராலய அலுவலகம் விற்பனையாகும் புதிதாகக் கட்டப்படடன