பனிமய அன்னையின் அன்புப் பிள்ளைகள் அனைவரையும் தூத்துக்குடி பனிமய அன்னை திருத்தலப் பேரலாய இணையதளத்துக்கு ஆண்டவர் இயேசுவின் இனிய பெயரில் அன்புடன் வரவேற்கிறேன்.
தமிழகத்தின் மிகத் தொன்மையான மரியன்னைப் பேராலயங்களுள் ஒன்றுதான் பனிமய அன்னை பேராலயம். 1582ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் அன்று இன்றைய கெரக்கோப் தெருவில் இரக்கத்தின் மாதா ஆலயம் என்ற பெயரில் கொச்சி ஆயர் மேதகு தவோரா ஆண்டகையால் இவ்வாலயம் அர்ச்சிக்கப்பட்டது. அதன்பின் 1713ஆம் ஆண்டு அருள்தந்தை மான்சி சே.ச. அவர்களின் முயற்சியால் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. 1806ஆம் ஆண்டு பனிமய அன்னைக்கு முதல் பொற்தேர் பவனி நடத்தப்பட்டது. 1960ஆம் ஆண்டு உரோமையிலுள்ள மேரி மேஜர் உயர் பசிலிக்காவுடன் திருத்தந்தை 23ஆம் ஜான் அவர்களால் இணைக்கப்பட்டது. ஆலயம் கட்டப்பட்ட 400ஆம் ஆண்டின் நினைவாக, 1982ஆம் ஆண்டு பங்குத் தந்தை அருள்திரு. லாம்பர்ட் மிராண்டா அவர்களின் முயற்சியால் இப்பேராலயம் பசிலிக்காவாக திருத்தந்தை புனித 2ஆம் ஜான் பவுல் அவர்களால் உயர்த்தப்பட்டது. அதை முன்னிட்டு அந்த ஆண்டும் (1982), தொடர்ந்து 2000, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அன்னைக்குத் தங்கத் தேர் எடுக்கப்பட்டது. தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எதிர்வரும் 05.08.2023 அன்று 16ஆம் முறையாக பனிமய அன்னை பொற்தேரில் பவனி வரவிருக்கிறார்கள்.
இப்பேராலயம் வந்து பனிமய அன்னையைத் தரிசித்து மன்றாடும் அனைவரும் விண்ணக, மண்ணக ஆசிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். வாருங்கள், இப்பேராலயத்தின் இணைய தளத்திற்குள் வந்து கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
அருள்பணி. குமார்ராஜா
அதிபர் & பங்குத் தந்தை